×

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சிறந்த வீரர் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டு

சிவகங்கை, ஜூன் 24: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்பாட்ட போட்டியில் சிறந்த வீரர்களுக்கான பரிசு பெற்றனர். சிவகங்கையில் வீரவிதை சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் கிருஷ், ஏழாம் வகுப்பு மாணவன் சாய்ராம் ஆகியோர் சிறந்த வீரர்களுக்கான பரிசு பெற்றனர். மாணவர்கள் இருவரையும் பள்ளி செயலர் சேகர் மற்றும ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

The post மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் சிறந்த வீரர் பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Champavika Higher Secondary School ,Veeravitha ,Silambatta ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...