×

ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு

ராஜபாளையம், ஜூன் 24: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை, ஐஇடிஇ மற்றும் ஐஇ(ஐ) இணைந்து ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் அணிக்கோவை ஆய்வகத்தின் (மேட்லாப்) பயன்பாடுகள் குறித்த மூன்று நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சென்னை லயோலா-ஐசிஏஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முனைவரும் மேட்லாப் சான்று பெற்ற பயிற்சியாளருமான திலிப் குமார், சென்னை விஇஐ டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் எழிலவன் மற்றும் மென்பொருள் உருவாக்குநர் மற்றும் பயிற்சியாளர் தேவி கலந்துகொண்டு ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தில் அணிக்கோவை ஆய்வகத்தின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் விரிவுரையாற்றினர்.

பயிற்சி வகுப்பில் 50 ஆசிரியர்கள் மற்றும் 5 ஆராய்ச்சி அறிஞர்கள் கலந்துகொண்டனர். முதல் இரண்டு நாள் பயிற்சி வகுப்பை திலிப்குமார் கையாண்டார். மூன்றாம் நாள் பயிற்சி வகுப்பை விஇஐ டெக்னாலஜிஸ் சென்னை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் எழிலவன் மற்றும் சாப்ட்வேர் டெவலப்பர் மற்றும் பயிற்சியாளர் தேவி ஆகியோர் கையாண்டனர். ராம்கோ தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் கணேசன், துணைமுதல்வர் ராஜகருணாகரன், துறைத் தலைவர் அருணாச்சல பெருமாள் ஆகியோரின் வழிகாட்டுதல்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் அழகு ஜெய்சுதன் பழனி, இணைப் பேராசிரியர் குணசேகரன், உதவிப் பேராசிரியர் ரமேஷ்பாபு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இசிஇ துறை ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Ramco College of Technology ,Rajapalayam ,Department of Electronics and Communication Engineering ,IET ,Dinakaran ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து