×

போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்

பெரம்பூர்: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொளத்தூர் காவல் மாவட்டம் சார்பில், பிரமாண்ட போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி, நேற்று மாலை 4 மணி அளவில் ராஜமங்கலம் 200 அடி சாலையில் நடைபெற்றது. இந்த பேரணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், கொளத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம். ராஜமங்கலம், கொளத்தூர், பெரவள்ளூர், மாதவரம். புழல். ஐ சி எப் உள்ளிட்ட காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்கள் மற்றும் இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவ மாணவியர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியில், மாணவ மாணவியர் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகத்தை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் எங்களை சுற்றி உள்ளவர்களையும் பயன்படுத்த விட மாட்டோம் என அமைச்சர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போதை பொருட்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தையும் அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு மண்டல இணை ஆணையர் மனோகர், கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர்கள் சிவக்குமார், ராகவேந்திர ரவி, ஆதிமூலம், இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், அம்பேத்கர். மூர்த்தி. திரு.வி.க நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் நாகராசன், ஐ.சி.எப் முரளி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆலந்தூர்: பரங்கிமலை மாவட்ட காவல் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் நேற்று நடந்தது. ராணுவ பயிற்சி மைய நுழைவாயிலில் இருந்து புறப்பட்ட பேரணி, கிண்டி கத்திபாரா நகர்புற சதுக்கத்தில் முடிந்தது. இதில், பரங்கிமலை துணை கமிஷனர், தீபக் சுவாச், மடிப்பாக்கம் உதவி ஆணையர் பிராங்க்டி ரூபன், ஆய்வாளர்கள் ரெத்தினகுமார். செலலப்பா உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.

The post போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Drug Awareness Rally ,Minister ,PK Shekharbabu ,Perambur ,International Day against Drug Abuse ,
× RELATED தமது பதவியை ராஜினாமா செய்வதாக கர்நாடக அமைச்சர் பி.ராகவேந்திரா அறிவிப்பு