×

மதுரவாயலில் பரபரப்பு போலி நகைகளை அடகுவைத்து மோசடி செய்த பெண்: கணவர், கூட்டாளிக்கு வலை

பூந்தமல்லி: போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் இந்துமதி (35), இவர், மதுரவாயல் பகுதியில் உள்ள நகை அடகு வைத்து பணம் தரும் தனியார் நிறுவனத்தில் கடந்த 5ம் தேதி முதல் சிறுக, சிறுக நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்துமதி, அடிக்கடி வந்து நகைகள் வைத்து விட்டு பணம் வாங்கி சென்றதால் சந்தேகமடைந்த தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அவர் வைத்த நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்பதும், அவர் இதுவரை கவரிங் நகைகளை வைத்து ரூ.17 லட்சம் வரை பணத்தை பெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து பைனான்ஸ் நிறுவனம் சார்பில், மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இந்துமதியை கைது செய்தனர்.விசாரணையில் அப்போது தனது கணவரின் உதவியுடன் வேறு ஒரு நபர் கொடுத்த தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதாக தெரிவித்தார். மேலும் தனியார் நகை பைனான்ஸ் ஊழியர்களுக்கு சந்தேகம் வராத வகையில் கவரிங் நகைகளை அதற்கு ஏற்றாற்போல் சீல் அச்சிட்டு கவரிங் நகைகளை வைத்து பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்துமதியை கைதுசெய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.‌ இவ்வழக்கு தொடர்பாக, தலைமறைவாக உள்ள அவரது கணவர் மற்றும் இதற்கு மூல காரணமாக இருந்தவரை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.

The post மதுரவாயலில் பரபரப்பு போலி நகைகளை அடகுவைத்து மோசடி செய்த பெண்: கணவர், கூட்டாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Poontamalli ,Indumati ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ