×

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா: 431 பயனாளிகளுக்கு பட்டா

திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் 1432 – ம் பசலிக்கான தீர்வாயம் நிறைவு நாளில் 431 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 6ம் தேதி, ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 1693 மனுக்கள் பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று ஜமாபந்தி நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளரும், ஜமாபந்தி அலுவலருமான கா.காயத்ரி சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

வருவாய் கோட்ட அலுவலர் மை.ஜெயராஜ பௌலின், ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றிய குழு துணை தலைவர் எம்.பர்கதுல்லாகான், ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தமிழ்செல்வி, துணை வட்டாட்சியர்கள் வரதராஜன், லில்லி ஒயிட், அம்பிகா, தேர்தல் துணை வட்டாட்சியர் சுகன்யா, தலைமை நில அலுவலர் செந்தில் குமார், வட்ட துணை சார் ஆய்வாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக வட்டாட்சியர் ந.மதியழகன் வரவேற்றார். விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ. ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினர். இதன் படி ரூ.2 கோடியே 3 லட்சத்து 29 ஆயிரத்து 230 மதிப்பீட்டில் 221 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 40 பேருக்கு கணினி பட்டா மாற்றமும், 57 பேருக்கு கிராம நத்தம் பட்டாவும், 113 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும் என மொத்தம் 431 பயனாளிகளுக்கு நேற்று பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 1262 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பரிசீலனையில் உள்ளதாக கலெக்டரின் நேர்முக உதவியாளரும், ஜமாபந்தி அலுவலருமான கா.காயத்ரி சுப்பிரமணி தெரிவித்தார்.

இதில் வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், கணேஷ், இளமதி, சுதா, வெங்கடேசன் விஷ்ணு பிரியா, மகேசு, கவிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் எல்.கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் விஸ்வநாத், வட்ட நிர்வாகிகள் குமரன், பரணிதரன், எம்.குமரேசன், பிரதீப் குமார், டில்லிபாபு, த.சுகுமார், பிரகாஷ், காதர் உன்னிஷா பேகம், தனலட்சுமி, காயத்ரி, ஜெயந்தி, சீனு, முனிரத்தினம், குமரவேல், விக்னேஷ் குமார், ஆனந்த, விமலன் ரமேஷ் செல்வகுமார், கிரண், விஜய், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகி சேகர் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

The post திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா: 431 பயனாளிகளுக்கு பட்டா appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Tiruvallur District Collector's Office ,Tiruvallur ,Patta ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...