×

அதிகாரிகள் அதிரடி 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

திருத்தணி: உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் ஜூன் 12ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். திருத்தணியில் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்றுமுன்தினம். தொழிலாளர் நல வாரிய உதவி ஆய்வாளர் சையத், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கிரிஜா மற்றும் போலீசார் திருத்தணி பல்வேறு பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் குறித்து நேற்றுமுன்தினம் திடீர் ஆய்வு ெசய்தனர். அப்போது, திருத்தணி பஸ் நிலையம் அருகே செருப்பு கடையில் வேலை செய்து வந்த 15 வயது சிறுவன், திருத்தணி பைபாஸ் சாலை பகுதியில் மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்த 15 வயது சிறுவன் உள்பட 5 பேரை மீட்டனர்.

பின்னர், திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் அனுமதித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் இருவரும் திருத்தணி அடுத்த முஸ்லீம்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், குடும்ப வறுமையின் காரணமாக கடைகள் வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது. குழந்தைகளை கடையில் வேலையில் அமர்த்திய உரிமையாளர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முகாமில் உள்ள குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 18 வயதிற்கு உள்ள குழந்தைகளை வேலையில் அமர்த்தும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அதிகாரிகள் அதிரடி 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tiritani ,World Child Workers Evolition Day ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை வராத நிலையில்...