×

பாலவாக்கம் பஸ் நிலையத்தில் பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் பாலவாக்கம் கிராமத்தில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ளவர்கள் வியாபாரம், வேலை சம்மந்தமாக , பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களும் பஸ் பாலவாக்கம் பஸ் நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவார்கள்.

இந்நிலையில் இரவு நேரத்தில் பாலவாக்கம் பஜார் பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. எனவே பாலவாக்கம் பஸ் நிறுத்தத்தில் புதிதாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பாலவாக்கம் பஜாரில் கடந்த ஒன்றறை வருடங்களுக்கு முன்பு உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு மேல் இந்த உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை இதை மீண்டும் எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; பாலவாக்கம் பஸ் நிறுத்தத்தில் கடந்த ஒன்றறை வருடங்கு முன்பு ரூ..3 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு கடந்த 3 மாதங்களாக எரியவில்லை. பஸ் நிலையத்திற்கு வந்து பஸ் ஏற வரும் மக்கள் இருளில் நிற்க வேண்டியுள்ளது. மேலும் உயர் கோபுர மின் விளக்கு எரியாததால், பஜார் பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் இங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகாது எனவே உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டும் என கூறினர்.

The post பாலவாக்கம் பஸ் நிலையத்தில் பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palavakkam bus ,Uthukottai ,Palavakkam ,Ellapuram ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு