×

நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான குஷ்பு அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜ நிர்வாகியான அவர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த போட்டோவை நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், தனக்கு இடுப்பு எலும்புக்காக மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், விரைவில் முழுமையாக குணமடைவேன் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு குஷ்பு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

The post நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Chennai ,BJP ,National Commission for Women ,Khushpu ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்