×

பணம் கட்டி சூதாடிய மூவர் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் உள்ள வசந்தம் ஹோம்ஸ் குடியிருப்பில் பணம் கட்டி சூதாட்டம் ஆடுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ யோகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (42), வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த நந்தகுமார் (40), பெருங்களத்தூர் பாரதி மெயின் ரோட்டை சேர்ந்த சேகர் (44) என தெரியவந்தது. மேலும், இதுகுறித்த புகார்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் நேற்று மாலை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,800 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post பணம் கட்டி சூதாடிய மூவர் கைது appeared first on Dinakaran.

Tags : Guduvancheri ,Thailavaram ,
× RELATED கூடுவாஞ்சேரி பெட்ரோல் பங்க் வாசலில்...