×

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: தயாநிதிமாறன் எம்பி அறிவிப்பு

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமித்து விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதிமாறன் எம்பி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதிமாறன் எம்பி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளராக பி.எல்.ஆனந்தன், துணை அமைப்பாளர்களாக இரா.குகன், கே.எல்.ஹேமாத்திரி, எஸ்.ஆர்.ஜெயேந்திரன், ஜெ.கலைவாணன், கே.ஈ.சபரீசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அமைப்பாளர்- கே.ராஜேஷ், துணை அமைப்பாளர்கள்-பா.பரத்குமார், கு.லோகநாதன், கே.பிரபாகர், எஸ்.கார்த்திகேயன், கு.செல்வம், டாக்டர் ர.ராஜ்குமார், ஆர்.கே.தினகரன். திருவள்ளூர் மத்திய மாவட்ட அமைப்பாளர்-வா.பார்த்திபன், துணை அமைப்பாளர்கள்-கா.எட்வின், பா.விஜயசாரதி, வி.உதயகுமார், பெ.ஜெகதீசன், ச.காட்வின்பென்ஹர், சே.சந்தோஷ்குமார், து.லோகநாதன் (எ) மகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வடகிழக்கு மாவட்ட அமைப்பாளர்- பி.முனியாண்டி, துணை அமைப்பாளர்கள்-டி.பி.பாலசுந்தரம், ஆர்.நாகராஜ், ம.ஆனந்குமார், எஸ்.டி.அமிர்தராஜ், இரா.பரசுராமன், பி.எஸ்.பரசு பிரபாகரன், வே.ஞானம். சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர்-ம.அசோக்குமார், துணை அமைப்பாளர்கள்-எ.பாபுராஜ், வி.ஜெ.திலிப்ராஜ், எஸ்.வடிவேல், எம்.கமலநாதன், ஆர்.சீனிவாசன், என்.மோகன்குமார், த.விஜயகுமார், பி.ஆர்.யஷ்வந்த் குமார், கே.ஜெயக்குமார், சி.லதா, எம்.இளங்கோவன், எ.விஜய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதே போல திருப்பத்தூர் மாவட்டம், மதுரை வடக்கு மாவட்டம், திருச்சி மத்திய மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், நீலகிரி மாவட்டம், ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கான விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பெயர்களை தயாநிதிமாறன் எம்பி வெளியிட்டுள்ளார்.

The post திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: தயாநிதிமாறன் எம்பி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Sports Development Team District ,Dayanithimaran ,Chennai ,Sports ,Dinakaran ,
× RELATED தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான்...