×

க்ரோமாவின் ‘பேக் டூ கேம்பஸ்’ விற்பனை: லேப்டாப்கள், டேப்லெட்கள் செல்போன்களுக்கு தள்ளுபடி

சென்னை: க்ரோமாவின் மிகவும் புகழ்பெற்ற ‘பேக் டூ கேம்பஸ்’ விற்பனை மூலம், லேப்டாப்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், ஹெட்போன்கள், இயர் போன்கள் உள்ளிட்டவற்றின் மீது பல்வேறு சலுகைகளை வழங்கப்படுகிறது. 250க்கும் மேற்பட்ட ரகங்களுடன் மிகவும் மலிவான விலையில் மாதம் ரூ.1,412க்கு தொடங்கி லேப்டாப்கள் கிடைக்கின்றன. மைக்ரோசாப்டின் ஹோம் & ஸ்டூடன்ட்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவதற்கு தயாராக நிறுவப்பட்ட இன்டெல் கோர் ஐ3 லேப்டாப்களை ரூ.32,990 தொடங்கி தேர்வு செய்யலாம் அல்லது மைக்ரோசாப்ட் ஹோம் & ஸ்டுடன்ட்ஸ் இயங்குதளம் நிறுவப்பட்ட Ryzen 3 லேப்டாப்களை ரூ.37,990 தொடங்கி தேர்வு செய்யலாம்.

ஆப்பிள் தயாரிப்புகள் மீதும் க்ரோமா சலுகைகள் அளிக்கிறது. வெறும் ரூ.11,999 தொடங்கி டேப்லெட்டை வாங்கலாம். மாதம் ரூ.1,357ல் தொடங்கி பல்வேறு வகையான உங்களது ஸ்மார்ட் போனை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களுக்கு ரூ.8 ஆயிரம் வரைஎக்சேஞ்ச் போனஸ் சலுகை பெறலாம். கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களை வாங்கினால், ரூ.9,999 மதிப்புள்ள அழைப்பு வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை வெறும் ரூ.499க்கு பெறலாம். இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்களின் மீது 65% வரை தள்ளுபடி வழங்குகிறது. ஸ்மார்ட் வாட்ச்கள் மீது 80% தள்ளுபடி பெறலாம்.

The post க்ரோமாவின் ‘பேக் டூ கேம்பஸ்’ விற்பனை: லேப்டாப்கள், டேப்லெட்கள் செல்போன்களுக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Chroma ,Back to ,Chennai ,Croma ,Back ,Campus' ,Dinakaran ,
× RELATED ‘கோ பேக் டூ மோடி’ மனதில் இருப்பதை கொட்டிய பாஜ வேட்பாளர்