×

ரூத்சே கிளாசிக் டென்னிஸ் அரையிறுதியில் ஓஸ்தபென்கோ

பர்மிங்காம்: ரூத்சே கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, லாத்வியா வீராங்கனை யெலனா ஓஸ்தபென்கோ தகுதி பெற்றார். காலிறுதியில் போலந்தின் மெக்தலேனா பிரெக்குடன் (25 வயது, 72வது ரேங்க்) நேற்று மோதிய ஓஸ்தபென்கோ (26 வயது, 17வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துகொண்டு விளையாடிய அவர் 7-5, 6-2 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 19 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் சீனாவின் லின் ஸூ (29 வயது, 39வது ரேங்க்) 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கனடாவின் ரெபக்கா மரினோவை (32 வயது, 90வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 6 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

The post ரூத்சே கிளாசிக் டென்னிஸ் அரையிறுதியில் ஓஸ்தபென்கோ appeared first on Dinakaran.

Tags : Ostapenko ,Rutsey Classic tennis ,Birmingham ,Latvia ,Yelena Ostapenko ,Dinakaran ,
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்