×

நிலக்கடலை அறுவடை தீவிரம்

தர்மபுரி, ஜூன் 24: பாப்பாரப்பட்டி அருகே நிலக்கடலை அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். கோடையில் பெய்த திடீர் மழையால், நிலக்கடலை செடிகள் செழித்து வளர்ந்து காய்கள் திரட்சியாக பிடித்துள்ளது. தற்ேபாது விவசாயிகள் நிலக்கடலை அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். வயலில் நிலக்கடலை செடிகளை பிடுங்கி களத்து மேட்டிற்கு கொண்டு வந்து, காய்களை பிரித்து எடுக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி செண்பகவள்ளி கூறியதாவது: ஒரு ஏக்கர் நிலத்தில், கடந்த தை மாதத்தில் கதிர் ரக நிலக்கடலை விதையை வாங்கி வந்து விதைத்தோம். ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகளை நடவு செய்தோம். 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினோம். அடி உரமாக காம்ப்ளக்ஸ் 10 கிலோ போட்டோம். இரு முறை மட்டுமே களை எடுத்தோம். இதனால் மூட்டைக்கு 40 கிலோ வீதம், 10 மூட்டை என 400 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. இந்த பகுதியில் அனைத்து விவசாயிகளும் கிணற்று பாசனத்தில் தான் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது, அறுவடைக்கு பின்னர் மானாவாரியிலும் நிலக்கடலை தான் பயிரிட உள்ளோம். மானாவாரியில் நல்ல மழை பெய்தால், 20 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிலக்கடலை அறுவடை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Paparapatti ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது