×

உ.பியில் 9 – 12ம் வகுப்பு பாடத்தில் நேரு, சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் நேரு, சாவர்க்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய செயலாளர் திப்யகாந்த் சுக்லா கூறியதாவது, “2023-24ம் கல்வியாண்டின் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான ஒழுக்கக் கல்வி பாடத்திட்டத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, சுவாமி விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி, பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா, ஆர்ய சமாஜ நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி, எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பண்டிட் ஸ்ரீராம் சர்மா, வீர சாவர்க்கர் உள்பட 11 தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்காக உழைத்த தலைவர்கள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்” என்று கூறினார்.

The post உ.பியில் 9 – 12ம் வகுப்பு பாடத்தில் நேரு, சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு appeared first on Dinakaran.

Tags : Nehru ,UP ,Uttar Pradesh ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...