×

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் இரவில் செம்மண் கடத்தல் தீவிரம் போலீசார் மீது குற்றச்சாட்டு

புதுக்கடை, ஜூன் 24: புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளான பரக்காணி, மங்காடு, அஞ்சாலி கடவு போன்ற பகுதிகளில் ஆற்றில் இருந்து மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்துதல் போன்றவை நடந்து வந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது செம்மண் கடத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிக அளவில் செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இது குறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து, கடத்தல் வாகனங்கள், ஜெசிபி ஆகியவை பெயரளவில் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

தற்போது மீண்டும் புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக அம்சி, வேங்கோடு, புதுக்கடை, காப்புக்காடு, வெள்ளையம்பலம் போன்ற பகுதிகளில் இருந்து இரவில் ஏராளமான வாகனங்களில் செம்மண் கடத்தப்படுகிறது. இது குறித்து புகார் எழுந்தாலும் யாரும் கண்டு கொள்வது இல்லை. இந்த கடத்தலுக்கு புதுக்கடை போலீஸ் அதிகாரிகளின் ஆதரவு உள்ளதாக புகார் எழுந்து இருக்கிறது. ஆகவே புதுக்கடை பகுதியில் கொடி கட்டி பறக்கும் செம்மண் கடத்தலை முடிவுக்கு கொண்டு கலெக்டர், எஸ்பி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சேவகர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் இரவில் செம்மண் கடத்தல் தீவிரம் போலீசார் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Pudukada ,Pudukadai ,Parakani ,Mangadu ,Anjali ,
× RELATED புதுக்கடை அருகே மீனவர் திடீர் சாவு