×

தேனி எம்.பி. தொகுதியில் அதிமுக வெற்றி எதிர்த்த வழக்கு ரவீந்திரநாத் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக சில விவரங்களை நீதிபதி கோரியிருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே தங்களது தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ரவீந்திர நாத் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

The post தேனி எம்.பி. தொகுதியில் அதிமுக வெற்றி எதிர்த்த வழக்கு ரவீந்திரநாத் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Theni ,High Court ,Rabindranath ,AIADMK ,Chennai ,2019 Lok Sabha elections ,O. P. Ravindranath ,O. Panneerselvam ,ADMK ,Theni MP High Court ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...