×

ரூ.17 கோடியில் கிண்டி குழந்தைகள் பூங்கா புதுப்பிப்பு பணி தொடக்கம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: சென்னை, கிண்டி வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வன பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: கிண்டி குழந்தைகள் பூங்கா ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தேவாங்கு சரணாலயம், புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிகள், காவேரி வன உயிரின காப்பகம், சூழல் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மற்றும் நீலகிரி வரையாடுகள் காப்பகம் ரூ.25 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியின் மூலம் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் 2022-23ம் ஆண்டு முதல் 2029-30 வரை 8 ஆண்டுகளுக்கு ரூ.920.52 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை செயல் அலுவலர் (கேம்பா) சுதாநாஷீ குப்தா, வன செயல் திட்ட அதிகாரி விஜேந்திர சிங் மாலிக், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மீதா பானர்ஜி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post ரூ.17 கோடியில் கிண்டி குழந்தைகள் பூங்கா புதுப்பிப்பு பணி தொடக்கம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kindi ,Minister ,Mathiventhan ,CHENNAI ,Principal Chief Conservator of Forests ,Guindy Forest Department ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி