×

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் புதிய வடிவமைப்புடன் எல்இடி ஹெட்லாம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் டேங்க் மற்றும் சீட் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன்புற சக்கரத்தில் தலைகீழ் டெலஸ்ேகாப் சஸ்பென்ஷன் இடம் பெற்றுள்ளது. இதில் உள்ள 163 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 16.6 பிஎச்பி பவரையும் 14.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

புதிய வாகன விதிகளின்படி, இன்ஜினில் பழுது ஏற்பட்டால் தெரிவிக்கக் கூடிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தலாம். பூஜ்யத்தில் இருந்து 60 கி.மீ வேகத்தை 4.41 நொடிகளில் எட்டி விடும். இதன்மூலம், இந்த பிரிவில் அதிவேக மோட்டார் சைக்கிளாக இது அமைந்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.27 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், கனெக்டெட் 2.0 வேரியண்ட் சுமார் ரூ.1.33 லட்சம் எனவும், புரோ சுமார் ரூ.1.37 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி appeared first on Dinakaran.

Tags : Hero Motor Corporation ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...