×

வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டவில்லை; கேரளாவில் பிரபல நடிகை வீட்டில் ரெய்டு: யூடியூபர்கள் வீடுகளிலும் சோதனை

திருவனந்தபுரம்: வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கேரளாவில் பிரபல நடிகை, யூடியூபர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். தற்போது யூடியூப் சேனல்கள் புற்றீசல்கள் போல முளைத்துள்ளன. நடிகர், நடிகைகள் உள்பட பலரும் சொந்தமாக யூடியூப் சேனல்கள் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

கேரளாவிலும் பிரபல நடிகைகள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல்கள் நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர் வருடத்தில் ₹1 கோடி முதல் ₹2 கோடி வரை சம்பாதிக்கின்றனர். ஆனால் இந்த வருமானத்திற்கு ஏற்ப இவர்கள் வரி கட்டுவதில்லை என்று வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து நேற்று கொச்சி, திருவனந்தபுரம் உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பிரபல யூடியூபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

பிரபல மலையாள சினிமா நடிகையான பேர்லி மாணியின் கொச்சியிலுள்ள வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது.

The post வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டவில்லை; கேரளாவில் பிரபல நடிகை வீட்டில் ரெய்டு: யூடியூபர்கள் வீடுகளிலும் சோதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,YouTubers ,Thiruvananthapuram ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...