×

வரலாற்றை மாற்ற முயலும் பாஜகவை முறியடிப்போம்; நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம்: மம்தா பானர்ஜி பேட்டி

பாட்னா: நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம் என மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவது தொடர்பாக பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த புதிய வியூகம் வகுக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் செந்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி; இன்றைய ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகள் பெற்றுள்ளது.

பாட்னாவில் தொடங்கி உள்ள இந்த முயற்சி மாபெரும் இயக்கமாக மாறும். மாநிலங்களிடம் இருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றையே மாற்ற நினைக்கிறது பாஜக. பாஜக ஆட்சியை அகற்றும் ஒரே நோக்கத்தில் நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது பாஜக. ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் இதுதான் இந்தியாவின் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும். பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம் இவ்வாறு கூறினார்.

The post வரலாற்றை மாற்ற முயலும் பாஜகவை முறியடிப்போம்; நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம்: மம்தா பானர்ஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : bajha ,Mamta Panerjee ,Patna ,Union Bajaka ,Lok Sabha ,Bajaka ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!