×

பஜாலி மாவட்டத்தில் 196 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது: அசாமில் ஆறுகள், தாழ்வான பகுதிகளில் கரைபுரளும் வெள்ளம்

திஸ்பூர்: அசாமில் கொட்டி தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் நிரம்பி தாழ்வான பகுதிகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக பஜாலி மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்வதால் 196 கிராமங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.

பெருவெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கூட முட்டியளவு நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் தமுல்பூரில் குமரிக்கட்டா பகுதியில் இடைவிடாது பெய்த மழையில் ஆற்றின் குறுக்கே போக்குவரத்திற்காக கட்டப்பட்டு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோஷைகான் பகுதியில் உள்ள மடாதி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த மரபாலமும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

The post பஜாலி மாவட்டத்தில் 196 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது: அசாமில் ஆறுகள், தாழ்வான பகுதிகளில் கரைபுரளும் வெள்ளம் appeared first on Dinakaran.

Tags : Bajali district ,Assam ,Thipur ,Dinakaran ,
× RELATED குடியரசுத்தலைவர் உரையின்போது...