×

கிண்டி வனத்துறை முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் வனப் பாதுகாப்பிற்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு..!!

சென்னை: சென்னை, கிண்டி வனத்துறை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (23.06.2023) வனப் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வன உயிரின மனித மோதல்கள் தடுப்பு நிவாரணமாக கடந்தாண்டு ரூபாய்.8.65 கோடியும், நடப்பாண்டு ரூபாய்.10 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடனுக்குடன் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மரகத பூஞ்சோலை திட்டத்தில் கடந்தாண்டு ரூபாய்.4.79 கோடியும், நடப்பாண்டு ரூபாய்.8.78 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வனப் பாதுகாப்பு படை நவீன மயமாக்கல் பணிகளுக்கு ரூபாய்.6.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசு மூலம் புலிகள் காப்பகம் மேம்பாட்டு பணிகளுக்கு ரூபாய்.10.26 கோடியும், வனச் சாலைகள் மேம்பாட்டிற்கு ரூபாய்.5.41 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. கிண்டி குழந்தைகள் பூங்கா ரூபாய்.17 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தேவாங்கு சரணாலயம், புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணிகள், காவேரி வன உயிரின காப்பகம், சூழல் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நீலகிரி வரையாடுகள் காப்பகம் ரூபாய்.25 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியின் மூலம் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் 2022-23ம் ஆண்டு முதல் 2029-30 வரை எட்டு ஆண்டுகளுக்கு ரூ.920.52 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுவதனையும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் 33 சதவீத பசுமை பரப்பை உயர்த்துவதற்கான திட்டங்கள், ஈரநில மேம்பாட்டுப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேற்காணும் திட்டங்களின் கீழ் 2022-23ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் 2023-24ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்/ தலைமை செயல் அலுவலர் (கேம்பா) சுதாநாஷீ குப்தா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்/வனச் செயல் திட்டம் விஜேந்திர சிங் மாலிக், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (ஆராய்ச்சி மற்றும் கல்வி) மீதா பானர்ஜி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / இயக்குநர் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு (பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ) நிறுவனம் அ.உதயன், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்/தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் / தலைமை இயக்குநர் தமிழ்நாடு பசுமை இயக்கம் தீபக் ஸ்ரீவத்சவா, காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட தலைமை திட்ட இயக்குநர் ஐ. அன்வர்தீன், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிண்டி வனத்துறை முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் வனப் பாதுகாப்பிற்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Mahari ,Kindi Department ,Chief Chief ,Office of the Prime Minister of the Defence. Madiventan ,Chennai ,Kindi Forest Department ,Defender ,Office ,Meeting Arena ,Ma ,Office of the Chief Chief of Wildlife Guard ,Kindi ,Madiventan Study ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...