×

எந்த பால் நிறுவனம் வந்தாலும் சலசலப்புக்கு ஆவின் அஞ்சாது: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

சென்னை: திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இன்று காலை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், தமிழ்நாட்டில் பால் கொள்முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் குறைந்த விலையில் ஆவின் பால் தரமாக வழங்கப்படுகிறது. ஆவின் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது.

பால் விலையை விவசாயிகளே தீர்மானிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், அவர்கள் வெளிமாநிலங்களுக்கு பால் கொண்டு செல்லாத வகையில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஆவின் நிர்வாகம் செய்து கொடுக்கும். மேலும், தமிழ்நாட்டில் அமுல் உள்பட எந்த பால் நிறுவனங்கள் வந்தாலும், ஆவின் நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் எவ்வித சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம் என்று அமைச்சர் மனோதங்கராஜ் உறுதி தெரிவித்தார்.

The post எந்த பால் நிறுவனம் வந்தாலும் சலசலப்புக்கு ஆவின் அஞ்சாது: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Manothankaraj ,CHENNAI ,Aavin Dairy ,Kakalur ,Tiruvallur ,Tamil Nadu Dairy Department ,Manodhankaraj ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...