×

கரூர் அருகே சோகம் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணராயபுரம் : கரூர் அருகே நிறை மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி ராகவி (28). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது ராகவி தற்சமயம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அவருக்கு வளைகாப்பு நடந்து பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்தார்.

பிரசவத்திற்கு 10 நாட்களே இருந்த நிலையில் அவர் பிரசவம் குறித்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த அவர்
மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து அறிந்த லாலாபேட்டை போலீசார், ராகவி உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கரூர் அருகே சோகம் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karur ,Krishnayapuram ,Karur District ,Dinakaran ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு