×

திருச்செந்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்: பணப்பையை பறித்து சென்றவர்கள் கைது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கல்லாமொழி பெட்ரோல் பங்கில் பணமில்லாமல் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்த இளைஞர்கள், கேஷியரை தாக்கிவிட்டு பணப்பையை பறித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 67). இவர் கல்லாமொழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் இருந்து 2 வாலிபர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கிற்கு வந்தனர். அப்போது மகாராஜனிடம் ரூ. 200-க்கு பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர்.

அப்போது அவர்கள் திடீரென அவரது பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அதில் ரூ. 22,470 இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஜன் இது தொடர்பாக குலசேக ரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெட்ரோல் பங்க் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். மகாராஜனை தாக்கிய 2 வாலிபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.

The post திருச்செந்தூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்: பணப்பையை பறித்து சென்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruchendur Thoothukudi ,Kallamonga ,Thiruchendur ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்