×

சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது: பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது என பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆவணம் எழுதுவோரின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறும் சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர ஆவணம் எழுதுவோர் நுழையக்கூடாது என்று பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது: பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Registry ,Dinakaran ,
× RELATED சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால்...