×

திருப்பதியில் பாதயாத்திரையாக சென்றபோது நேர்ந்த துயரம்: மலைப்பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை

ஆந்திரா: திருப்பதி மலைப்பாதையில் 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். 7-வது மலைப்பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில் அருகே 3 வயது நிரம்பிய கௌஷிக் என்ற சிறுவன் பெற்றோருடன் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனை வாயில் கவ்வியபடி புதருக்குள் சென்று மறைந்தது. இதை பார்த்த பக்தர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதால் மிரண்ட சிறுத்தை சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. சிறுத்தை தாக்கியதில் முகம், கை, கால்களில் படுகாயம் அடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வன அலுவலர் சதீஷ் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் மட்டும் மலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

The post திருப்பதியில் பாதயாத்திரையாக சென்றபோது நேர்ந்த துயரம்: மலைப்பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை appeared first on Dinakaran.

Tags : Padyatri ,Tirupatti ,Andhra Pradesh ,Tirapati ,Tirupati ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு