×

முதியவரை இரும்பு கம்பியால் தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை

சங்ககிரி: தேவூர் அருகே வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (61). இவர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (36). என்பவருடன் சேர்ந்து கடந்த 2016, ஆகஸ்ட் 7ம் தேதி, கறி வறுத்து சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது ரமேஷ், சண்முகத்தை பார்த்து என்னடா கறி வறுத்து வச்சிருக்கிற என கெட்ட வார்த்தை திட்டி, இரும்பு கம்பியை எடுத்து அடித்துள்ளார். இதில் காயமடைந்த சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சண்முகம், தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் ரமேஷை கைது செய்து, சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, நேற்று ரமேசுக்கு 3ஆண்டு சிறை தண்டனையும், ₹1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

The post முதியவரை இரும்பு கம்பியால் தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Shanmugam ,Vinobaji ,Devur ,Ramesh ,Pullakaundampatti Agraharam ,
× RELATED பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல்...