×

பைக் மீது மோதி தலைக்குப்புற கார் கவிழ்ந்து வாலிபர் பலி 4 பேர் படுகாயம் திருவண்ணாமலை- செங்கம் சாலையில்

திருவண்ணாமலை, ஜூன் 23: திருவண்ணாமலை அருகே கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். மேலும், நிலைத்தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்த காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை- செங்கம் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, திருவண்ணாமலையில் இருந்து கண்ணக்குறுக்கை கிராமத்தை நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. அப்பாது, ஐயம்பாளையம் புதூர் கிராமத்துக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில், பைக் தூக்கி வீசப்பட்டது. அதில், பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சுந்தரசேகரன்(31) என்பவர் சம்பவ இடத்திேலயே பலியானார். இவருக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

மேலும், பைக் மீது மோதியதால், நிலைத்தடுமாறிய கார் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதனால், அந்த காரை ஓட்டிச் சென்ற கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த மாரிதாஸ்(21) மற்றும் பயணம் செய்த பெருந்துறைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(20), சிம்பு(19), அகரம் கிராமத்தைச் சேர்ந்த சபரி(40) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார், விபத்தில் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த சுந்தரசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது மோதி தலைக்குப்புற கார் கவிழ்ந்து வாலிபர் பலி 4 பேர் படுகாயம் திருவண்ணாமலை- செங்கம் சாலையில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai-Sengam road ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Patugayam ,
× RELATED விண்ணை பிளக்கும் அரோகரா...