ஆறுமுகநேரி, ஜூன் 23: புன்னக்காயலில் ரூ.40.46 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். புன்னக்காயலில் வாறுகால் அமைக்கும் பணிக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.40.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இப்பணிகள் துவக்க விழாவிற்கு மீன்வளம் – மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக பங்குதந்தை பிராங்கிளின் அடிகளார் பிரார்த்தனை செய்தார். மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, ஆழ்வை. யூனியன் சேர்மன் ஜனகர், புன்னக்காயல் பஞ். தலைவர் சோபியா, மேலாத்தூர் பஞ். தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவராவ், தாசில்தார் வாமனன், திமுக வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். புன்னக்காயல் பஞ். செயலர் கருப்பசாமி நன்றி கூறினார்.
The post புன்னக்காயலில் ரூ.40.46 லட்சத்தில் வாறுகால் பணி appeared first on Dinakaran.