×

பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

அரூர், ஜூன் 23: மறைந்த திமுக தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரூர் அரசு கலைக்கல்லூரியில் நாளை (24ம்தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எலும்பியல் மருத்துவம், கண், காது, மூக்கு தொண்டை, பல், மனநலம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், காசநோய், தொழுநோய், கொரோனா பரிசோதனைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை அளிக்கப்பட உள்ளன. முகாமில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்படவுள்ளது. முகாமில் சிறப்பு நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். இதனை அரூர் பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு, சுகாதாரத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

The post பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Pannoku Specialty Medical Camp ,Aroor ,DMK ,Chief Minister ,Karunanidhi ,Aroor Government Arts College ,Pannoku Special Medical Camp ,Dinakaran ,
× RELATED காதல் கணவனுடன் சென்னை சென்ற இளம்பெண் திடீர் சாவு