×

சூபர்வைசரை அடித்து கொன்ற சிவகங்கை வாலிபருக்கு ஆயுள் தண்டனை

 

நெல்லை, ஜூன் 23: பணகுடியில் கோழிப்பண்ணை சூபர்வைசரை அடித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம் வட்டவிளை இடலாக்குடியை சேர்ந்த செல்லப்பன் மகன் ஆனந்தன்(44). கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சுப்பிரமணியபுரம் 4வது தெருவைச் சேர்ந்த தவசிலிங்கம்(55) சூபர்வைசராக பணியாற்றி வந்தார்.

அதே பண்ணையில் சிவகங்கை மாவட்டம் வக்கூர் காலனியைச் சேர்ந்த அழகர் மகன் செந்தூர்பாண்டி(36) தொழிலாளியாக வேலை பார்த்தார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி அலுவலக அறையில் செந்தூர்பாண்டி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சூபர்வைசர் தவசிலிங்கம், செந்தூர்பாண்டியிடம் படுத்து தூங்கும்படி கூறி டிவியை ஆப் செய்து விட்டுச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தூர்பாண்டி மண்வெட்டியால் தவசிலிங்கத்தை அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவசிலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சீனிவாசன் விசாரித்து, செந்தூர்பாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

The post சூபர்வைசரை அடித்து கொன்ற சிவகங்கை வாலிபருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Nellai ,Panagudi ,
× RELATED சிவகங்கை மாவட்டம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் சுவரொட்டி!!