×

வத்திராயிருப்பு அருகே நள்ளிரவில் திடீரென தீ பிடித்த டூவீலர்

வத்திராயிருப்பு, ஜூன் 23: வத்திராயிருப்பு அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஜே.சி.பி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு தூங்கச்சென்றார். அதிகாலை 3 மணியளவில் டயர் வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே வெளியே வந்து பார்த்தபோது டூவீலர் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வாகனத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளார். இது சம்மந்தமாக கூமாப்பட்டி காவல் நிலையத்தில் சுந்தரமூரர்த்தி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வத்திராயிருப்பு அருகே நள்ளிரவில் திடீரென தீ பிடித்த டூவீலர் appeared first on Dinakaran.

Tags : Vathirayirupu ,Vathirayiru ,Vathirayirup ,Vathrayiripu ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பு அத்திகோயிலில் மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானைகள்