×

மாநில அளவில் மாணவர்களுக்கான செரனிடி கோப்பை கிரிக்கெட்

சென்னை: சென்னை சுழற் சங்கங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ‘செரனிடி கோப்பை’ கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மாநில அளவில் நடத்தப்படும் இப்போட்டியின் 4வது தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் , நடப்பு டிஎன்பிஎல் தொடர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்சன் உட்பட பலரின் திறமைகளை இந்தப் போட்டி வெளி உலகக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. செயற்கை புல்தரையில் நடைபெறும் இந்தப் போட்டியின் ஆட்டங்கள் தலா 50/50 ஓவர்களை கொண்டதாக இருக்கும். மொத்தம் 16 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் போட்டியில் பங்கேற்க உள்ளன.

அவற்றில் 14 பள்ளிகள் சென்னையை சேர்ந்தவை. மற்ற 2 பள்ளிகள் கோவை, மதுரை மாநகரங்களில் உள்ளவை. இவை தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும். இன்று தொடங்கும் லீக் சுற்றின் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அவற்றில் வெல்லும் பள்ளிகள் இறுதி ஆட்டத்தில் களம் காணும். போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை முதல் வாரத்தில் நடக்கும. தொடக்க விழா இன்று ராயப்பேட்டை அமீர் மகாலில் நடக்கிறது. போட்டிகள் ராயப்பேட்டை, வண்டலூர், தரமணி, தாம்பரம், கேளம்பாக்கம்-1, கேளம்பாக்கம்-2, வேளச்சேரி என 7 களங்களில் நடக்கும்.

The post மாநில அளவில் மாணவர்களுக்கான செரனிடி கோப்பை கிரிக்கெட் appeared first on Dinakaran.

Tags : Serenity Cup Cricket ,Chennai ,Serenity Cuphi ,Chennai Circular Associations ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்