×

சில்லி பாய்ன்ட்…

* காலிறுதியில் ஏக்தரினா
ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெட்1 ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதன் ஆட்டம் ஒன்றில் ரஷ்யா வீராங்கனை ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவா(28வயது, 22வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்(19வயது, 4வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஏக்தரினா ஒரு மணி 15நிமிடங்களில் 6-4, 6-0 என்ற நேர் செட்களில் காஃபை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

* ஐஓசி அறிவுறுத்தல்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகார் காரணமாக, கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் நீக்கப்பட்டதை அடுத்த விரைவாக தேர்தலை நடுத்த வேண்டும் என்று உலக மல்யுத்த ஒன்றியம் எச்சரித்திருந்தது. ஆனால் பிரிஜ்பூஷண் குடும்பத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது தொடர்பாக எழுந்த பிரச்னையால் தேர்தல் ஜூலை 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(ஐஒசி), ‘உலக மல்யுத்த ஒன்றியத்துடன்(யுடபிள்யூடபிள்யூ) உடன் இணைந்து பணியாற்றுவதின் மூலமும், அவற்றின் விதிகளை, உத்தரவுகளை கடைபிடிப்பதின் மூலம் பிரச்னைகளை தீர்க்க இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐஓஏ) உரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்’ என்று அறிவுறுத்தி உள்ளது.

* ஆஸி மகளிர் நிதான ஆட்டம்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஒரே ஒரு ஆஷஸ் டெஸ்ட் நேற்று நாட்டிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற அலிஸ்ஸா ஹீலி தலைமையிலான ஆஸி முதலில் பேட்டிங் செய்தது. பெத் முனி 33, லிச்ஃபீல்டு 23 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் மற்ற வீராங்கனைகள் நிதானமாக முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை உயர்த்திய வண்ணம் இருந்தனர்.

* ஆட்டங்கள் ரத்து
இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் ரோத்சே கிளாசிக் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. அங்கு மழை காரணமாக நேற்று தெடங்கிய ஆட்டங்கள் நிறுத்தப்பட்டன. அப்படி நிறுத்தப்பட்ட ஆட்டங்கள் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

* கபடி அணிக்கு பாராட்டு
உத்ரபிரதேசத்தில் சமீபத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடந்தது. அதில் மாணவர்களுக்கான கபடிப் போட்டியில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக அணி 3வது இடம் பிடித்தது. கோப்பையுடன் திரும்பிய அணிக்கு பல்கலைக்கழக நிர்வாகிகள், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்துனர்.

* வேண்டும் பெண் பயிற்சியாளர்கள்: ஆடவர் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியும் ஏற்படுத்தி வருகின்றது. கூடவே ஆடவர்களுக்கான போட்டிளைப் போன்று மகளிருக்கும் யு17, யு20 உலக கோப்பை போட்டிகள், கண்டம் வாரியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே, பெண் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உலக கால்பந்து கூட்டமைப்பு(பிபா) தீவிரமாக உள்ளது. பிபா சார்பில் பெண் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பிபா, ‘பெண் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆப்ரிக்கா, ஒஸியானிக் கால்பந்து கூட்டமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் வேலையை தொடங்கி உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது.

* ஆலன் மறைவு: ஆஸி.யின் முன்னாள் வேகம் பீட்டர் ஆலன்(87). இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் தர போட்டி ஒன்றில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களையும் அறுவடை செய்தவர். அதிலும் மெல்போர்னில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. உலகில் அதிக வயதான கிரிக்கெட் வீரர் என்ற பெருமையுடன் வாழ்ந்த ஆலன் நேற்று முதுமை மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிந்தார்.

* மகளிர் கிரிக்கெட்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) மகளிருக்கான ஃபிரேயர் கோப்பை டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் தலா 8 அணிகள் களம் காண உள்ளன. டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 26ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரையும், ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரையிலும் சென்னையில் நடைபெற உள்ளன.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Bet1 Open Women's Tennis Match ,Berlin, Germany ,Ektarina ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...