×

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன் எடுத்துட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க… ரோடு சரியில்லன்னா நீங்க பொறுப்பு இல்ல…


* காசு கட்டலனா வண்டிய நிறுத்திடுவீங்கல…

‘என்னடா இது பகல் கொள்ளையால இருக்கு’ என்ற வடிவேல் பட ஜோக் போல தற்போது நாடு முழுக்க சுங்கச்சாவடி கட்டண வசூல்தான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அந்த வகையில் திரைப்பட இயக்குநர் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியரிடம் கேள்வி கேட்டு வறுத்தெடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநராக இருப்பவர் சண்முகம் முத்துசாமி. இவர் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணிக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பூதக்குடி சுங்கச்சாவடியில் கார் நிற்கிறது. இயக்குநர்: ரோடு ரொம்ப கேவலமா இருக்கு, இது எந்த டோல்பூத்.
ஊழியர்: இது பூதக்குடி டோல்பிளாசா. இயக்குநர்: இந்த ரோடு ரொம்ப கேவலமா இருக்குனு சொன்னா. நீங்க அத கேட்கமாட்டிங்க. காசு மட்டும் தான் வசூலிப்பிங்க. நாங்க காசு கட்டலனா எங்கள நிறுத்திடுவிங்க. ரோடு சரியில்லைனா என்.எச்.ல எப்படி கம்ப்ளயிண்டு பண்ணனும். ஊழியர்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 1033க்கு கால் பண்ணினால் பதில் அளிப்பார்கள். இயக்குநர்: ரோடு சரியில்லன்னா நீங்க அதுக்கு பொறுப்பு இல்ல, ஆனா காசு கட்டலனா வண்டிய நிறுத்திடுவீங்கல்ல.. ஊழியர்: நான் கூலி ஆளுங்க, எங்களோட வேல வசூல் பண்றது மட்டும் தான்.

இயக்குநர்: நான் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போறேன், சாப்பாடு சரியில்லை என்றால் நான் அந்த ஊழியர திட்டுவேன்ல, அந்த ஹோட்டல மூடிடுவாங்கல்ல. ஊழியர்: ஹோட்டலும், இதுவும் ஒன்னா? இத மூடிட முடியுமா? ஹோட்டல மூடுவது சாதாரணம். இத மூடனும்னா கவர்மென்ட்ல தான் கேட்கணும். 1033ல் தொடர்பு கொள்ளுங்கள். இயக்குநர்: உடனே எடுத்து பதில் சொல்லிட்டு தான் மறுவேளை பார்க்கிறார்கள். இதுவரை நான் 3 முறை இந்த எண்ணில் புகார் அளித்துள்ளேன். கேஸ் போட்டிருக்கேன் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு உரையாடல் முடிகிறது.

* டோல்கேட் ஊழியரை வெளுத்து வாங்கிய சினிமா இயக்குநர்

The post தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன் எடுத்துட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க… ரோடு சரியில்லன்னா நீங்க பொறுப்பு இல்ல… appeared first on Dinakaran.

Tags : National Highway Commission ,Road ,Sidillanna ,Kasu Katalana ,Vativela ,Vativel ,Sickillanna ,
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து