×

போன் யூஸ் பண்ணுவேன்… இல்லைன்னா சாவேன்: மாடியில் இருந்து குதிக்க முயன்ற மாணவியை காப்பாற்றிய போலீஸ்

செல்போன் மோகத்தால் தற்போதைய இளைஞர்கள், மாணவர்கள் தங்களுடைய உயிரையே துச்சமாக நினைக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் காரைக்குடியில் நடந்து உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவரின் 18 வயது மகள், பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரி செல்லவுள்ளார். அவர் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தியதால் அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் அவரது மகள், வீட்டின் மாடியில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். அருகில் இருந்தவர்கள் சமாதானம் பேசி கீழே இறங்க கூறினர். அவர் கேட்காமல் நான் சாக போறேன் என்று கத்தினார். தகவலறிந்து வந்து போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேலே ஏறி வந்தால் கீழே குதித்து விடுவேன் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். இந்நிலையில் பெண் போலீஸ் ஒருவர் மற்றும் தீயணைப்பு வீரர் ஒருவர் காப்பாற்ற சென்றனர். சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த அந்த மாணவி போலீசார் தன்னை நெருங்கி வருவதை திரும்பிக் கவனித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தடுமாறி, அவரது பிடி நழுவியது. விநாடி நேரத்தில் மாடியில் உள்ள தடுப்புச் சுவரை பிடித்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தார். உடனடியாக தீயணைப்பு வீரர் உதவியுடன், போலீசார் விரைந்து செயல்பட்டு, கீழே விழுந்து விடாமல் அந்த மாணவியை இறுகப் பிடித்து, மீட்டனர். தகுந்த அறிவுரைகள் கூறி தந்தையிடம் சேர்த்தனர். செல்போனில் பேசியதை கண்டித்ததற்காக மகள், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தது சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

The post போன் யூஸ் பண்ணுவேன்… இல்லைன்னா சாவேன்: மாடியில் இருந்து குதிக்க முயன்ற மாணவியை காப்பாற்றிய போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Illainna Chaven ,karaigudi ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...