×

500 மதுக்கடைகள் மூடல் பாஜ எம்எல்ஏ வரவேற்பு

நெல்லை: பாஜ துணைத்தலைவரும் நெல்லை எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். பாஜ எந்த மதத்திற்கும் எதிராக பேசுவதில்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தப்பில்லை. அப்படி அவர் வந்தால் வரவேற்கிறேன். அமலாக்கத்துறை தனி நிர்வாகம். அதன் நடவடிக்கைக்கும் ஒன்றிய அரசுக்கும் தொடர்பில்லை. வற்றாத ஜீவநதியான தாமிரபரணியை தூர்வாரி பாதுகாக்க பாஜ எம்எல்ஏக்களுடன் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்தித்து பேச உள்ளேன். தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 500 மதுக்கடைகள் மூடல் பாஜ எம்எல்ஏ வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Baja MLA ,Nayanar Nagendran ,Baja ,Bride ,Tamil Nadu ,Bar ,Dinakaran ,
× RELATED கூட்டணியிலிருந்து அதிமுக சென்றது ஏன்?: நயினார் நாகேந்திரன் புது குண்டு