×

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 11 சதவீதம் குறைந்தது

புதுடெல்லி: வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்யும் வங்கிகளில் உலக அளவில் புகழ்பெற்றது சுவிஸ் வங்கிகளாகும். இங்கு பதுக்கப்படும் பணம் குறித்து வங்கி நிர்வாகங்கள் ரகசியம் காப்பதால், உலகளவில் ஏராளமான அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் இதில் பல ஆயிரம் கோடிகளை டெபாசிட் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்பு பணத்தின் அளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த ஆண்டு நிலவரப்படி வங்கிகளில் உள்ள இந்தியர்களின் டெபாசிட் 11 சதவீதம் குறைந்து உள்ளது. தற்போது இந்தியர்களின் பணம் ரூ.30 ஆயிரம் கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது. இது சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகளில் உள்ள டெபாசிட்கள் மட்டும் ஆகும். இது இந்தியர்கள் கருப்பு பணமோ அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மூன்றாவது நாடுகளை பயன்படுத்தி வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்கள்பற்றிய விவரங்கள் இதில் அடங்காது.

The post சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 11 சதவீதம் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு