×

செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி வகிப்பதை எதிர்த்து அதிமுக மாஜி எம்பி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு தடை கோரி அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகளை இரு அமைச்சர்களுக்கு மாற்றிய தமிழ்நாடு அரசு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று அறிவித்தது. இந்நிலையில், எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்று செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ (பதவியில் நீட்டிக்க கூடாது) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில், வழக்கை எதிர்கொண்டுள்ள செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ள சூழலில் அவர் பதவியில் நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.
அரசியலமைப்புச் சட்டம் 164(1) வது பிரிவின்படி, அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ள நிலையில், செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிப்பது சட்டவிரோதமானது. அது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய செயலாகும். எனவே, செந்தில் பாலாஜி அமைச்சராக கடமையாற்ற தடை விதிக்க வேண்டும். அமைச்சர்களுக்கான எந்த சலுகைகளையும் வழங்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி வகிப்பதை எதிர்த்து அதிமுக மாஜி எம்பி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Senthil Balaji ,ICourt ,Chennai ,Jayavarthan ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு?