×

சாத்தாங்காடு பகுதியில் தபால்நிலைய அலுவலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு வலை

திருவொற்றியூர்: மணலி அருகே மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (56). திருவொற்றியூர் தபால் நிலையத்தில், நிலைய அலுவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து தனது பைக்கில் அசோகன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். மணலி எம்எப்எல் சந்திப்பு அருகே சென்றபோது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அசோகனின் பைக்கை வழிமறித்து காரை குறுக்கே நிறுத்தியுள்ளனர். பின்னர் காரில் இருந்து வெளியே வந்து 3 நபர்கள், அசோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மீண்டும் காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதில் அவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் அசோகன் துடிதுடித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து அசோகனை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். காரில் வந்தவர்கள் எதற்காக அசோகனை வெட்டினார்கள், முன் விரோதம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சாத்தாங்காடு பகுதியில் தபால்நிலைய அலுவலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chathangad ,Tiruvottiyur ,Asokan ,Moolachatram ,Manali ,Thiruvottiyur ,Chathangadu ,
× RELATED திருவொற்றியூர், மணலி பகுதிகளில்...