×

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் ஹீரோ, ஹீரோயின் வாய்ப்பு தருவதாக பல லட்சம் பறிப்பு: மர்ம நபர்கள் குறித்து இளைஞர்கள் போலீசில் புகார்

சென்னை: சென்னை தி.நகர் பிரகாசம் சாலையில் ‘வி’ கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் பெயரில் மர்ம நபர்கள் சிலர், புதிதாக எடுக்க உள்ள படத்துக்கு நடிகைகள், நடிகர்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளனர். அதை நம்பி மேற்கண்ட முகவரிக்கு வந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் சினிமாவில் வாய்ப்பு தருவதாக பல லட்சம் பணம் பறித்துள்ளனர். ஆனால், 3 மாதங்கள் கடந்த பிறகும் புது திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் ‘வி’கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்று கேட்டுள்ளனர். அப்போது அலுவலகத்தில் இருந்த சினிமா தயாரிப்பு நிறுவன இணை இயக்குனர் ஜெகதீசன்(50) எங்கள் நிறுவனம் சார்பில் ஹீரோ, ஹீரோயின்கள் யாரையும் நடிக்க நாங்கள் தேர்வு செய்யவில்லை. இதற்காக எந்த விளம்பரமும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பணம் இழந்தவர்கள், மோசடி செய்த நபர்களின் பெயர் மற்றும் செல்போன் எண்களுடன் வி கிரியேஷன்ஸ் நிறுவன இணை இயக்குநர் ஜெகதீசன் தேனாம்ேபட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் இளம் பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்த மர்ம நபர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் ஹீரோ, ஹீரோயின் வாய்ப்பு தருவதாக பல லட்சம் பறிப்பு: மர்ம நபர்கள் குறித்து இளைஞர்கள் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,V' Creations ,T. Nagar Prakasam Road, Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...