×

கர்நாடகாவில் பரபரப்பு ரூ.1 லட்சம் மின்கட்டண பில் 90 வயது பாட்டிக்கு ஷாக்…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் 90 வயது பாட்டிக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பாக்யாநகர் என்ற சிறிய கிராமத்தில் கிரிஜம்மா என்ற 90 வயது பாட்டி சிறிய வீடு ஒன்றில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டில் மொத்தமே 2 பல்புகளை மட்டும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு இந்த மாத மின்கட்டண பில்லாக ரூ.1.03 லட்சம் வந்தது. இதனால் கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது எப்படி வந்தது என்று கிரிஜம்மாவுக்கு குழப்பாக இருந்து வருகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது மகன் தினக்கூலி தொழிலாளி. இந்த வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே வசிக்கிறோம். மின்கட்டணமாக இந்த பெரிய தொகை எப்படி வந்தது என்று தெரியவில்லை. பத்திரிகையாளர்கள் தான் இதற்கு தீர்வு பெற்று கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் நான் ரூ.70 அல்லது ரூ.80 தான் மின்கட்டணம் செலுத்துவேன்’ என்றார். இதையடுத்து மின்சார அலுவலக அதிகாரிகள் கிரிஜம்மா வீட்டுக்கு நேரில் வந்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெரிய தொகை மின்கட்டண பில் உங்களுக்கு வந்துவிட்டது. இந்த தொகையை நீங்கள் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறி சமாதானம் செய்தனர்.

The post கர்நாடகாவில் பரபரப்பு ரூ.1 லட்சம் மின்கட்டண பில் 90 வயது பாட்டிக்கு ஷாக்… appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Kopal district ,Dinakaran ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...