×

வாலாஜாபாத் – அவளூர் இடையே தரைப்பாலத்தில் சிமென்ட் சாலை பணி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் – அவளூர் இடையே தரைப்பாலத்தில் சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொங்கியுள்ளன. வாலாஜாபாத் ரவுண்டானாவிலிருந்து அவளூர் வரை செல்லும் பாலாற்று தரை பாலம் வழியாக நாள்தோறும் தம்மனூர், கன்னடியன் குடிசை, அவளூர், ஆசூர், காமராஜபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வாலாஜாபாத் வருகின்றனர். பின்னர், இங்கிருந்து நாள்தோறும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, ஓரகடம், மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல், சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் வாலாஜாபாத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள், நாள்தோறும் பள்ளிக்கு சைக்கிள் மற்றும் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும், இந்த தரைப்பாலத்தின் வழியாக நாள்தோறும் கனரக லாரிகளும் சென்று வருகின்றன. இதனால், தரைபாலம் முழுவதும் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்பட்டன. இதனை சீரமைக்க வலியுறுத்தி கிராமமக்கள் கனரக லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெடுஞ்சாலை துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் இந்த சாலை பணி நடைபெறும் என தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், தற்போது அவளூர் சுற்றுவட்டார கிராம மக்கள் சென்றுவர தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து ஏற்கனவே பயன்படுத்தி வந்த தரைப்பாலத்தை தற்போது மண் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த தரைப்பாலத்தின் மேலே சிமென்ட் காங்கிரீட் சாலை அமைக்கும் பணி துவங்கி, விரைவில் சில வாரங்களில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வாலாஜாபாத் – அவளூர் இடையே தரைப்பாலத்தில் சிமென்ட் சாலை பணி appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Alur ,Wallajabad ,Wallajabad Roundabout ,Alur… ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...