×

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்ற நினைத்த காதலனுடன் கோயிலில் பெண்ணுக்கு திருமணம்: போலீசார் முன்னிலையில் நடந்தது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரோஜா (26). இவர், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (30) என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன், இவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, ரோஜாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த பாண்டித்துரை அவரிடம் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், கர்ப்பமான ரோஜா இதுகுறித்து பாண்டித்துரையிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரோஜாவை பார்க்க வருவதை குறைத்துக் கொண்ட பாண்டித்துரை, என்னுடைய குடும்பத்தினருக்கு உன்னை பிடிக்கவில்லை எனக்கூறி நழுவ பார்த்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ரோஜா, காஞ்சிபுரம் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ காயத்திரி, இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், பாண்டித்துரை திருமணம் செய்துகொண்டால் புகாரை ரோஜா வாபஸ் தெரிவித்ததின்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில் உள்ள பிள்ளையார் கோயிலில் பாண்டித்துரை மாலை மாற்றி தாலி கட்டினார். இதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை ரோஜா வாபஸ் பெர்றார்.

The post காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்ற நினைத்த காதலனுடன் கோயிலில் பெண்ணுக்கு திருமணம்: போலீசார் முன்னிலையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram Mariamman Temple ,Sethupattu ,Tiruvannamalai district ,Pandithurai ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...