×

திருக்கழுக்குன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா அண்ணாமலை ஒரு காமெடி பீஸ்: திண்டுக்கல் லியோனி பேச்சு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான யுவராஜ் தலைமை தாங்கினார். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கட்சி முன்னோடிகள் 200 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும், புத்தாடைகள் மற்றும் பள்ளி மாணவிகள் 25 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்கி சிறப்புரையாற்றினர். இதில், முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் அரசு, மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் சுகுமாரன், விஜயன், சரவணன், செங்குட்டுவன், வேதகிரி, அரவிந்தன், சம்பத் குமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் லியோனி கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கம் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அவை ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் குட்கா ஊழல் குறித்து அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதே வெளிவந்தது. அதுபோன்று தற்போது ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது. யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அண்ணாமலை கூறும் புகார்கள் அனைத்துமே புஷ்வானம் போன்றது. அவர் அரசியலில் ஒரு காமெடி பீஸ் ஆகதான் செயல்படுகிறார். காரணம் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் எதையுமே மக்கள் நம்புவதில்லை’ என்றார்.

The post திருக்கழுக்குன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா அண்ணாமலை ஒரு காமெடி பீஸ்: திண்டுக்கல் லியோனி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Dindigul Leoni ,DMK ,Dindigul Leonie ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை எதிரொலி...