×

திமுகவை யாராலும் அழிக்க முடியாது: கனிமொழி எம்பி பேச்சு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் மற்றும் 100 அடி உயரம் அமைக்கப்பட்டு இருந்த கட்சி கொடி கம்பம், கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை வகித்தார். விழாவில் திமுகவின் துணை பொது செயலாளரும், எம்பியுமான கனிமொழி கலந்துகொண்டு கட்சியின் 100 அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்து விட்டு பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் மேம்படுத்திட கருணாநிதி எண்ணற்ற திட்டங்களை தீட்டினார்.

கொள்கையோடு இருக்கும் திமுகவை சிலர் சீண்டிப்பார்க்கிறார்கள், அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சீண்டிப்பார்த்தாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.

The post திமுகவை யாராலும் அழிக்க முடியாது: கனிமொழி எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ponnambalambatti ,Chungachavadi ,Trichy District Sandalambatti ,Artisan Century Festival ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல்