×

கொடைக்கானல் சிட்டி வியூ பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு: பட்டாம்பூச்சி வடிவம் அமைத்து அசத்தல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த தன்னார்வ அமைப்பினர், அவைகளை பட்டாம்பூச்சி வடிவில் அமைத்து அசத்தினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் சிட்டி வியூ பகுதி மிக முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் விழிப்புணர்வு இல்லாமல் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி குப்பைக் காடாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொடைக்கானலை சேர்ந்த தன்னார்வலர்கள் சிட்டி வியூ பகுதியை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

இதனிடையே, தன்னார்வலர்கள் சிட்டி வியூ பகுதியை தூய்மைப்படுத்தினர். அப்போது சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்ட கூடாது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

The post கொடைக்கானல் சிட்டி வியூ பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு: பட்டாம்பூச்சி வடிவம் அமைத்து அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal City View ,Kodaikanal ,Kodaikanal, Dindigul district ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை