×

தேனி அரண்மனைப்புதூர் துணை சுகாதார நிலைய சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி: தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரில் ஆற்றங்கரையோரம் துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அரண்மனைப்புதூர் ஊராட்சியில் அய்யனார்புரம், வீருசின்னம்மாள்புரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, மரியாயிபட்டி, பாண்டியராஜபுரம் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. மேலும், இக்கிராம ஊராட்சியில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமத்தினருக்குமான அரசு மருத்துவமனையாக இந்த துணை சுகாதார நிலையம் உள்ளது.

இத்துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் குறுகியதாகவும், குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ஆட்டோக்களில் கூட நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வரமுடியாத அளவிற்கு சாலை மிக மோசமாக உள்ளது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை 10 அடி சாலையாகவும், குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், இக்கிராம மக்கள் முல்லையாற்றில் குளிக்க இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கர்ப்பிணி பெண்கள் பிரசவம் வரை மாத தடுப்பூசி செலுத்திக்கொள்ள இச்சாலையில் வருகின்றனர். நீண்டதூரத்தில் இருந்து ஆட்டோவில் வரும் நோயாளிகள் குண்டும், குழியுமான சாலையில் சென்று வருவதால் கர்ப்பிணி தாய்மார்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து இச்சாலைய சீரமைக்க வேண்டும் என்றனர்.

The post தேனி அரண்மனைப்புதூர் துணை சுகாதார நிலைய சாலை சீரமைக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Honey Palanimapithur Auxiliary Health Station ,Honey ,Palanimapithur ,Theni ,Honey Palamithur Auxiliary Health Station Road ,Dinakaran ,
× RELATED நுங்கு ஸ்மூத்தி