×

மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பீகார் மாநிலம் பாட்னாவிற்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு புறப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேகொள்ளப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சரத்பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடப்பதையொட்டி, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடந்த 12ம் தேதி நிதிஷ்குமார் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அன்றைய தினத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் இருந்ததால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது. இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறக்க இருந்ததால் அவராலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘கலைஞர் கோட்டம்’ திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் 23ம் தேதி நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க இருக்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தனது கருத்துக்களை பதிவு செய்வதுடன், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பீகார் மாநிலம் பாட்னாவிற்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Bihar State ,Patna ,Chief Minister of State ,Bharat ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Patna, Bihar State ,Bajagu ,B.C. G.K. Stalin ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!